ஆரம்பத்தில் இருந்தே இறக்கத்தில் நடைபெற்ற நிப்டி வர்த்தகம் நாளின் இறுதியில் 486 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி ஸ்மால்கேப் 100’ குறியீடு குறைந்தபட்சமாக 1.74 சதவீத இறக்கத்துடனும்; ‘நிப்டி மைக்ரோகேப் 250’ குறியீடு, அதிகபட்சமாக 2.81 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி 500 ஹெல்த்கேர்’ குறியீடு குறைந்தபட்சமாக 0.72 சதவீத இறக்கத்துடனும்; ‘நிப்டி ஆட்டோ’ குறியீடு அதிகபட்சமாக 2.82 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,388 பங்குகளில், 503 ஏற்றத்துடனும்; 2,813 இறக்கத்துடனும்; 72 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்தன. முக்கிய குறுகிய கால சராசரிகளுக்கு கீழேயும், குறைந்த மொமென்டத்துடனும் வர்த்தகமாவதால், டெக்னிக்கலாக நிப்டியில் இறக்கம் தொடர்வதற்கான வாய்ப்பே தென்படுகிறது. ஓரளவுக்கு ஓவர்சோல்டாக இருப்பதால், செய்திகள் பாசிட்டிவ்வாக இருந்தால், சிறியதொரு ‘புல்பேக்’ அல்லது ‘கன்சாலிடேஷன்’ நடக்க வாய்ப்புள்ளது. 23,800-க்கு மேலே செல்லாதவரை இறக்கம் நின்றுவிட்டது என்று கருதமுடியாது. செய்திகள் பாசிட்டிவ்வாக இருந்தாலும் கூட 23,400 என்ற ரெசிஸ்டென்ஸை தாண்ட மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
ஆதரவு 22,675 22,550 22,400
தடுப்பு 23,050 23,325 23,450
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)
நிப்டி50 (எண்ணிக்கை)
ஹெச்.டி.எப்.சி., பேங்க் 757.95 -24.35
ஓ.என்.ஜி.சி., 281.10 10.90
எட்டர்னல் 232.71 -9.47
டாடா ஸ்டீல் 193.19 -3.46
கோட்டக் மஹிந்திரா பேங்க் 367.15 -3.95
நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)
எஸ் பேங்க் 18.09 -0.38
சுஸ்லான் எனர்ஜி 40.77 -1.50
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 61.84 -1.40
என்.எம்.டி.சி., 77.30 – 0.55
அசோக் லேலண்டு 163.16 -7.79
நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)
ஐநாக்ஸ் விண்டு 79.16 -2.76
என்.பி.சி.சி.,இந்தியா 80.50 -4.02
இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் 118.82 -2.86
கரூர் வைஸ்யா பேங்க் 294.35 9.55
பிரமல் பார்மா 143.87 2.80
மற்ற சில பங்குகளின் விலை விபரம்
டி.சி.டபிள்யூ., 39.65 -1.52
எக்ஸைடு இண்டஸ்ட்ரீஸ் 300.00 -7.15
கிராபைட் இந்தியா 630.00 34.25
லாரெஸ் லேப்ஸ் 1,008.00 -15.50
டைம் டெக்னோபிளாஸ்ட் 164.60 -4.24
