RCB Vs SRH | IPL முதல் போட்டிக்கு கர்நாடகா MP, MLA-களுக்கு தலா 2 IPL டிக்கெட்

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று 2026 ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில், கர்நாடக எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு 5 விஐபி டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயானந்த் காஷப்பனவர் உட்பட பல சட்டமன்ற உறுப்பினர்கள், தாங்கள் “விஐபி-க்கள்” என்றும், டிக்கெட் வாங்குவதற்காகப் பொதுமக்களைப் போல வரிசையில் நிற்க முடியாது என்றும் சட்டசபையில் தெரிவித்தனர்.

மேலும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் எம்.எல்.ஏ-க்களை அவமதிப்பதாகவும், டிக்கெட்டுகளை கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வதாகவும் எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

Source link