கச்சா எண்ணெய் தாக்கம்: இண்டிகோ, எட்டர்னல் சரிவு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை மீண்டும் 100 டாலரை கடந்து உள்ளதால், அது சார்ந்த நிறுவனங்களின் பங்குகளின் விலை நேற்று 5 சதவீதம் வரை சரிந்தன. எரிபொருள் செலவு அதிகரிக்கும் என்ற அச்சத்தால், இண்டிகோ நிறுவன பங்கு விலை நேற்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட ஐந்து சதவீதம் சரிந்தது.

உணவு வினியோக தொழிலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளால், எட்டர்னல் நிறுவனத்தின் பங்குகளும் சரிவு கண்டன. மூலப்பொருட்களின் விலை உயர்வால், ஜே.கே. டயர் மற்றும் அப்போலோ டயர்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளையும் முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை செய்தனர்.

நிறுவனம் பங்கு விலை சரிவு (%) இண்டிகோ 4,099.50 4.55 எட்டர்னல் 233.17 3.72 ஏசியன் பெயின்ட்ஸ் 2,207.40 2.77 பெர்ஜெர் பெயின்ட்ஸ் 414.65 2.54 ஜே.கே., டயர் 398.40 2.08 அப்போலோ டயர்ஸ் 412.45 1.72 ஆதாரம்: என்.எஸ்.இ.,

Source link