தி.மு.க., கூட்டணியில், கட்சிகளுக்கு இடையே தொகுதிகளை கண்டறிவதில், எந்தவித இழுபறியும் இல்லை. பொறுமையாக பேச்சு

தி.மு.க., கூட்டணியில், கட்சிகளுக்கு இடையே தொகுதிகளை கண்டறிவதில், எந்தவித இழுபறியும் இல்லை. பொறுமையாக பேச்சு நடந்து வருகிறது. கமல் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம். பதிவு செய்த ஒரு கட்சி, ஆறு ஆண்டுகள் தேர்தலில் நிற்காமல் போனால், பதிவு ரத்தாகி விடும் என்ற எண்ணத்தில் தெரிவித்த கருத்து.
அது மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கையும் அல்ல; தி.மு.க.,வுக்கு எதிரான கருத்தும் இல்லை. தி.மு.க., கூட்டணி வலுவாக, கட்டுக்கோப்பாக இருப்பதற்கு, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் வி.சி.க.,வுக்கு முக்கிய பங்கு உண்டு. கடந்த முறை, மூன்று கட்சிகளுக்கும் தலா ஆறு என, மொத்தம் 18 இடங்களை தி.மு.க., ஒதுக்கியது. என்னையும் கம்யூனிஸ்டாக பார்ப்பதால், இப்போதும் மொத்தம் 18 இடங்களை ஒதுக்கியுள்ளனர்.
– திருமாவளவன், தலைவர், வி.சி.க.,

Source link