“நாட்டின் தலையெழுத்தைப் பாருங்கள்…” – த.வெ.க. விஜய்யை மறைமுகமாக விமர்சித்த இ.பி.எஸ்.!

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி  சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் நேற்று (27.03.2026) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே இந்த முறை தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். இதுவரை ஏமாற்றியது போதும். இனி தமிழ்நாட்டு மக்கள் ஏமாறுவார்களா?. இந்த முறை திமுக ஆட்சிக்கு மக்கள் தக்க பாடத்தினை இந்த தேர்தல் மூலமாகப் புகட்டுவார்கள். 

இன்னொரு கட்சி இருக்கிறது. யாராவது இறந்து போனால் அங்கே சென்று துக்கம் விசாரிப்பார்கள். ஆனால் அந்த கட்சிக்குக் கொடுமையைப் பாருங்கள். நாட்டினுடைய கொடுமை, தலையெழுத்தைப் பாருங்கள். எதற்காக வந்து இறந்தார்கள்?. ஏன் இறந்தார்கள்?. அந்த குடும்பத்தை இங்கே வரவழைத்து அனுதாபம் சொல்கிறார்களாம். ஏனென்றால் அது சினிமா, அப்படித்தான் இருக்கும். டெக்னிக்கலாதான் இருக்கும். மக்கள் ஏமாற வேண்டாம். சினிமா பார்க்கலாம். அது எதற்கு என்றால் மனதில் இருக்கிற கஷ்டங்களை போக்குவதற்கு சினிமாவை பார்க்கலாம், ரசிக்கலாம். அதோடு விட்டு விட வேண்டும். 

நிஜ வாழ்க்கையில் ஒத்து வருமா? நிஜ வாழ்க்கை வேறு. சினிமா வாழ்க்கை வேறு. தயவுசெய்து இளைஞர்களும் பெண்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நிஜ வாழ்க்கை என்பது கடினம். சினிமா என்பது கனவைப் போலக் கனவு கலைகிற போது கண்ணைத் திறந்தால் கனவு மறைந்து போய்விடும். அதுபோல சினிமா பார்ப்பது திரையரங்கை விட்டு வெளியே வந்துவிட்டால் அதோடு போய்விடும்.  அப்படித்தான் நீங்க என்ன வேண்டும் என்பதைத் தயவு செய்து அருள் கூர்ந்து நீங்கள்  சிந்திக்க வேண்டும் சிந்தித்துப் பாருங்கள்” எனப் பேசினார். இவ்வாறு த.வெ.க.வையும், அக்கட்சியின் தலைவர் விஜய்யையும் நேரடியாக பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

Source link