சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த சூரி… புதிய படத்திற்கு அவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நகைச்சுவையில் இருந்து கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ள சூரி அழுத்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். ‘மாமன்’ படத்தை தொடர்ந்து தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ படங்களை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ சமீபத்தில் வெளியான நிலையில் இப்படத்திற்காக சூரி வாங்க உள்ள சம்பளம் குறித்த தகவல் தான் வெளியாகியுள்ளது.

அதாவது சூரி இந்த புதிய படத்துக்காக ரூ.25 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது முந்தைய படத்தை விடவும் அதிகமாம். சூரி சத்தமே இல்லாமல் சம்பவம் செய்துவிட்டார் என்று திரையுலகினர் பேசுகிறார்கள்.

Source link