கணவர் உடலை வீட்டின் பின்புறத்தில் சுகன்யா புதைத்தார். இடைநிலைப் பள்ளி படித்து வரும் அவரது மகள் அம்ருதா இதனை கண்டு பிடித்தார். யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவதாக தாய் மிரட்டியதால், அவள் அமைதியாக இருந்தாள்.
இந்த நிலையில், நேற்று தாய்க்கும் மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சுகன்யா தன் மகள் அம்ருதாவைக் கொல்ல முயன்றார்.
அம்ருதா தப்பித்து ஓடிவிட்டாள். அவள் தன் தந்தையின் சொந்த ஊரான ஹனிமிரெட்டிபள்ளிக்குச் சென்று, தன் உறவினர்களிடம் நடந்ததைப் பற்றிக் கூறினாள்.
இதற்கிடையே சுகன்யா, கல்யாணதுர்கம் கிராமப்புற போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சுகன்யாவிடம் விசாரணை நடத்தினர். புதைக்கப்பட்ட அவரது கணவர் உடலை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
