சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 28) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1840 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 280 ரூபாய்க்கும், கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து 13,660 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 28)ஆபரண தங்கம், கிராம் 13,350 ரூபாய்க்கும், சவரன், 1,06,800 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (மார்ச் 27), தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, 13,430 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 1,07,440 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 15 ரூபாய் குறைந்து, 245 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 15,000 ரூபாய் சரிவடைந்து, 2.45 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்
சென்னையில் இன்று (மார்ச் 28) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1840 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 280 ரூபாய்க்கும், கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து 13,660 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
