காத்மாண்டு: உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலாக உள்ளேன் என வாழ்த்து செய்தி அனுப்பிய பிரதமர் மோடிக்கு நேபாள

காத்மாண்டு: உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலாக உள்ளேன் என வாழ்த்து செய்தி அனுப்பிய பிரதமர் மோடிக்கு நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நன்றி தெரிவித்தார்.

நம் அண்டை நாடான நேபாளத்தில், கடந்த ஆண்டு வெடித்த மாணவர் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி.சர்மா ஒலி தலைமையிலான கம்யூ., ஆட்சி கவிழ்ந்தது. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் கடந்த 5ல் நடந்தது.

இதில், ராப் பாடகரும், காத்மாண்டு முன்னாள் மேயருமான பாலேந்திர ஷா தலைமையிலான ஆர்.எஸ்.பி., எனப்படும் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி வெற்றி பெற்றது. நேற்று பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்றார்.

அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார். இந்நிலையில் இன்று நேபாள பிரதமர் பாலேந்திர ஷா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி.

நமது மக்களின் வளர்ச்சிக்காகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், உங்களுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்ற நான் ஆவலுடன் உள்ளேன். இவ்வாறு பாலேந்திர ஷா கூறியுள்ளார்.

Source link