ட்ரம்ப் நீரிணையை ஈரான் திறக்க வேண்டும்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சமீபத்தில் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற வருங்கால முதலீட்டுத் திட்ட முன்னுரிமைக்கான உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அதில், ஈரானைக் குறிப்பிட்டுப் பேசிய ட்ரம்ப், “அவர்கள் (ஈரான்) ட்ரம்ப் நீரிணையைத் திறக்க வேண்டும். நான் ஹார்மோஸ் நீரிணையைப் பற்றித் தான் கூறினேன்.  மன்னிக்கவும்,  அது ஒரு மிகப் பெரிய தவறு. நான் தவறுதலாகக் கூறிவிட்டேன் என்று செய்தி வெளிவரும். நான் தவறுதலாக எதையும் கூறவில்லை. வருங்காலத்தில் ஹார்மோஸ் நீரிணை, ட்ரம்ப் நீரிணை என்று தான் அழைக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். இது கூட்டத்தில் இருந்தவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது.  

கடந்த சில தினங்களுக்கு முன்பு, “ஹார்மோஸ் நீரிணையை ஈரானும், அமெரிக்காவும் சேர்ந்து கட்டுப்படுத்தும். அதற்கான சாத்தியம் உள்ளது, இது போரை நிறுத்துவதற்கான ஒரு தீர்வாக அமையும். ஒப்பந்தத்திற்காக, ஈரான் எங்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால், தற்காலிகமாகப் போர் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது” என்றெல்லாம் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், ஈரான் தரப்பில் இருந்து இந்த கருத்துக்கள் அனைத்தும் முழுவதுமாக மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஈரான் – அமெரிக்க மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் கடந்த நான்கு வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்த போர் ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தார். தற்போது, இந்த போர் நிறுத்தம் ஏப்ரல் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், நிரந்தர போர் நிறுத்தம் குறித்து இதுவரை எந்த சமிக்கைகளும் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Source link