TN Assembly Election| ராஜபாளையம் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டி – ஜான் பாண்டியன் அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்தொகுதியில் வேட்பாளர் நிறுத்துவது குறித்து ஜான் பாண்டியன் ஆலோசித்து வந்தார்.

இந்த நிலையில், ராஜபாளையம் தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தாமரை சின்னத்தில் போட்டியிட போவதாக ஜான் பாண்டியன் அறிவித்தார். இந்த தொகுதியில் ஜான் பாண்டியனின் மனைவி பிரிசில்லா பாண்டியன் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது .

ஜான் பாண்டியனின் இந்த முடிவால் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தொகுதிகளில் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது. பா.ஜ.க.வின் 27 தொகுதிகளில், த.மா.கா.விற்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில், த.ம.மு.க.வின் ஒரு தொகுதி என 33 தொகுதிகளில் தாமரை சின்னம் போட்டியிடுகிறது.

Source link