மியாமி: “வெனிசுலா மற்றும் ஈரானின் ராணுவ வெற்றிக்குப் பிறகான அடுத்த இலக்கு கியூபாதான்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் உரையாற்றிய டொனால்டு ட்ரம்ப், வெனிசுலா மற்றும் ஈரானில் அமெரிக்க ராணுவம் மகத்தான வெற்றிகளைப் பெற்றுள்ளதாக பாராட்டினார்.
அப்போது அவர், ‘‘நான் இந்த மகத்தான (அமெரிக்க) ராணுவத்தை உருவாக்கினேன். நீங்கள் ஒருபோதும் போரில் ஈடுபட வேண்டியிருக்காது என்று நான் அவர்களிடம் கூறி இருந்தேன். ஆனால், சில நேரங்களில் ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. சொல்லப்போனால் அடுத்தது கியூபாதான்’’ என தெரிவித்தார்.
எனினும் பின்னர், ‘‘நான் அப்படி சொல்லவில்லை என்று பாவித்துக்கொள்ளுங்கள். நான் அப்படி சொல்லவில்லை என்றே நினைத்துக்கொள்ளுங்கள்’’ என குறிப்பிட்டார்.
