சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதில் கடும் இழுபறி நீடித்து வந்தது. இதனால், தொகுதி ஒதுக்கீடு பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் 28, தேமுதிக 10, விடுதலை சிறுத்தைகள் 8, இந்திய கம்யூனிஸ்ட் 5, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 2, மனிதநேய ஜனநாயக கட்சி 1, எஸ்டிபிஐ 1, முக்குலத்தோர் புலிப்படை 1, தமிழர் தேசம் கட்சி 1 தொகுதிகள் ஒதுக்கப்படுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 70 தொகுதிகள் போக, எஞ்சிய 164 தொகுதிகளில் திமுக களமிறங்குகிறது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் பட்டியலை திமுக எம்பி டி.ஆர்.பாலு வெளியிட்டார்.
காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விபரம்
பொன்னேரி (தனி)
சோளிங்கர்
ஈரோடு கிழக்கு
ஸ்ரீபெரும்புதூர் (தனி)
உதகை
அறந்தாங்கி
கடலூர்
காரைக்குடி
திருவாடனை
மயிலாடுதுறை
சிவகாசி
ஸ்ரீவைகுண்டம்
நாங்குநேரி
குளச்சல்
விளவங்கோடு
கிள்ளியூர்
வேளச்சேரி
ஊத்தங்கரை (தனி)
துறையூர் (தனி)
கவுண்டம்பாளைம்
ஆத்தூர் (தனி)
பென்னாகரம்
சிங்காநல்லூர்
அம்பாசமுத்திரம்
கிருஷ்ணகிரி
உசிலம்பட்டி
சங்கரன்கோவில்
மேலூர்
இந்திய கம்யூனிஸ்ட் தொகுதிகள்
தளி
திருத்துறைப்பூண்டி
ஸ்ரீவில்லிபுத்தூர்
திருப்பூர் வடக்கு
பவானிசாகர்
மார்க்சிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்
கீழ்வேளூர்
கந்தர்வகோட்டை
பத்மநாபபுரம்
பழநி
திருவொற்றியூர்
தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்
விருத்தாசலம்
விருதுநகர்
தர்மபுரி
குடியாத்தம்
சேலம் மேற்கு
போளூர்
பல்லாவரம்
திருத்தணி
ஓமலூர்
மைலம்
மதிமுக போட்டியிடும் தொகுதிகள்
மொடக்குறிச்சி
மதுரை தெற்கு
கடையநல்லூர்
சீர்காழி
விசிக போட்டியிடும் தொகுதிகள்
காட்டுமன்னார்கோவில்
செய்யூர்
திருப்போரூர்
அரக்கோணம்
திண்டிவனம்
பெரியகுளம்
கள்ளக்குறிச்சி
பண்ருட்டி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
பாபநாசம்
வாணியம்பாடி
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் இடங்கள்
திருச்செங்கோடு
பொள்ளாச்சி
முக்குலத்தோர் புலிப்படை( உதயசூரியன் சின்னம்)
சிவகங்கை
மனிதநேய மக்கள் கட்சி( உதயசூரியன்)
நாகப்பட்டினம்
மணப்பாறை
மனிதநேய ஜனநாயக கட்சி(உதயசூரியன் சின்னம்)
சிதம்பரம்
எஸ்பிஐ கட்சி( உதயசூரியன் சின்னம்)
நன்னிலம்
தமிழர் தேசம் கட்சி( உதயசூரியன்)
நத்தம்
