“என் எண்ணத்தை உடைத்து நொறுக்கிய படம்”

பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஹாப்பி ராஜ்’. இப்படத்தில் ஜிவி பிரகாஷ், ஸ்ரீ கௌரி பிரியா, ஜார்ஜ் மரியான், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களோடு 90களில் பிரபல ஹீரோவாக வலம் வந்த அப்பாஸும் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் கலகலப்பான காதல் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

இப்படத்தின் டீரெய்லரை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த தனுஷ் படம் குறித்தும் பதிவிட்டிருந்தார். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ், ஜிவி பிரகாஷ் நடிப்பை பாராட்டி படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். இதனிடையே பிரதீப் ரங்கநாதன் படம் வெற்றி பெற வாழ்த்தினார். இப்படத்தின் இயக்குநர் இவரின் உதவி இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு பா.ரஞ்சித் தந்தை – மகன் உறவை மிக அழகாகக் கையாளப்பட்ட படம் எனப் பாராட்டியிருந்தார். 

இந்த நிலையில் இப்படத்திற்கு மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஹேப்பி ராஜ் திரைப்படம் பார்த்தேன். வெறும் கொண்டாட்டமும் குதூகலமும் மட்டுமே நிரப்பபட்டு வருகிற இன்னொரு சினிமாவாக இருக்கும் என்ற என் எண்ணத்தை உடைத்து நொறுக்கிய உணர்ச்சிமிக்க படைப்பாகவும் இருந்தது ஹேப்பிராஜ். குதிரைமுட்டை என்ற கேலி வார்த்தையையும் அதன் வலியையும் ஏற்று நடித்திருந்த ஜார்ஜ் மரியனின் இருப்பும் சிரிப்பும் பெரும் நம்பிக்கையை கொடுத்தது. நல்ல கதைக்குள் ஒரு அணிலை போல துள்ளி குதித்திருக்கும் ஜீ.வி பிரகாஷுக்கும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் ப்ரியமும் வாழ்த்துக்களும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Source link