நாங்கள் லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறோம். திமுக மகா மகா கூட்டணியை அமைத்திருக்கிறது. கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதால் பொறுமையாக பேசி அனைவரையும் திருப்திப்படுத்தி ஒற்றுமையாக கையழுத்திட்டிருக்கிறோம்.
எல்லாரையும் ஒற்றுமைப்படுத்துவதற்காக நேரமானதே தவிர காலம் தாழ்த்தப்படவில்லை.
பாராளுமன்ற தேர்தல் முடிந்த உடனேயே சட்டமன்ற தேர்தலுக்கான வேலையை தொடங்கி விட்டோம்.
175 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்திலும், 59 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் சின்னத்திலும் போட்டியிடுகிறோம்.
திமுக தேர்தல் அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும். வரும் 31ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன்” என்று கூறினார்.
