விருதாச்சலத்தில் பிரேமலதா.. விருதுநகரில் விஜய பிரபாகரன் போட்டி – தே.மு.தி.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு! |DMDK – Premalatha to contest in Virudhachalam; Vijay Prabhakaran in Virudhunagar — DMDK Candidate List Released!

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க. 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளது.

இந்த கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட முக்கியமான கட்சிகள் அனைத்தும் இடம் பெற்று உள்ளன.

இதில் தே.மு.தி.க வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கிடையே இன்று கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை திமுக அறிவித்தது.

இதைத்தொடர்ந்து தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.

அதன்படி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் அவரது மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும்,

தருமபுரி – இளங்கோவன்

சேலம் மேற்கு – அழகாபுரம் மோகன்ராஜ்

ஓமலூர் – ஏ.ஆர். இளங்கோவன்

மயிலம் – எல். வெங்கடேசன்

பல்லாவரம் – அனகை முருகேசன்

திருத்தணி – டி. கிருஷ்ணமூர்த்தி

குடியாத்தம் – கே.பி. பிரதாப்

போளூர் – டிபி சரவணன் போட்டியோடுகின்றனர்.

இந்த தேர்தலில் தேமுதிக, 6 தொகுதிகளில் அதிமுகவின் இரட்டை இலையை எதிர்த்தும், மீதமுள்ள 4 தொகுதிகளில் அன்புமணி பாமகவின் மாம்பழ சின்னத்தை எதிர்த்தும் போட்டியிடுகிறது. விருத்தாசலத்தில் பிரேமலதா மாம்பழம் சின்னத்தை எதிர்த்து போட்டியிடுகிறார்.

அதேபோல்விஜய பிரபாகரன் ஏற்கனவே மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோற்ற நிலையில் தற்போது சட்டமன்றத் தேர்தலில் விருதுநகரில் மீண்டும் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

Source link