பெங்களூரு: பெங்களூருக்கு எதிரான பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள்

பெங்களூரு: பெங்களூருக்கு எதிரான பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 201 ரன் குவித்தது.19வது பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று துவங்கியது. சின்னசாமி மைதானத்தில் நடந்து வரும் முதல் போட்டியில் பெங்களூரு – ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா (7), ஹெட் (11), நிதிஷ் குமார் (1) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர்.

ஆனால், கேப்டன் இஷான் கிஷான் அதிரடி காட்டினார். மற்றொரு முனையில் கிளாசனும் (31) ஓரளவுக்கு ரன் சேர்த்தார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இஷான் 38 பந்தில் 80 ரன் குவித்து அவுட்டானார். அதன்பிறகு, களமிறங்கிய இளம் வீரர் அனிகேத் வர்மா 18 பந்தில் 43 ரன் குவித்து அணியின் ரன் குவிப்பிற்கு கைகொடுத்தார்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுக்கு 201 ரன் குவித்தது. பெங்களூரு அணி சார்பில் டபி, ஷெப்பேர்டு தலா 3 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், அபிநந்தன், சூயஷ் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Source link