சென்னை: சட்டசபை தேர்தலில் திமுகவும், பாஜகவும் இம்முறை 18 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன. மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணிக் கட்சிகளை பாஜ எதிர்கொள்கிறது.
திமுக Vs பாஜ மோதும் தொகுதிகள்;
1. மயிலாப்பூர்
2. அவிநாசி
3,திருப்பூர் (தெற்கு)
4. கோவை (வடக்கு)
5. புதுக்கோட்டை
6. திருப்பத்தூர்
7. சாத்தூர்
8. திருச்செந்தூர்
9. வாசுதேசநல்லூர்
10. ராதாபுரம்
11. நாகர்கோவில்
12. ஆவடி
13. திருவண்ணாமலை
14. தஞ்சாவூர்
15. திருவாரூர்
16. மானாமதுரை
17. ராமநாதபுரம்
18. ராசிபுரம்
இந்த 18 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. பாஜ தரப்பில் இன்னமும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதில், திருவண்ணாமலையில் அமைச்சர் வேலு, ஆவடியில் அமைச்சர் நாசர், ராசிபுரத்தில் அமைச்சர் மதிவேந்தன், ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு ஆகியோரை, பாஜ வேட்பாளர்கள் எதிர்கொள்ள உள்ளனர்.
18 தொகுதிகளை தவிர்த்து பாஜ போட்டியிடும் எஞ்சிய தளி, மொடக்குறிச்சி, திருப்பூர் மேற்கு, ஊட்டி, கந்தர்வக்கோட்டை, விளவங்கோடு, அறந்தாங்கி, குளச்சல், பத்மநாபபுரம் ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன.
