ஈரோட்டில் 65 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய கஞ்சா பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக, ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விளையாட்டு மைதானத்தில் சாக்குப் பையுடன் நின்றிருந்த நபர் ஒருவர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார்.
அவரை விரட்டிப்பிடித்த போலீசார், விசாரித்தனர். அதில், மயிலாடுதுறை அடுத்த சீர்காழியை சேர்ந்த விஜயா ஆதித்யன் (22) என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், ரூ.65 ஆயிரம் மதிப்பிலான 1.300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
