புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனுார் கடை வீதியில் வரும் 6ம் தேதி நடக்கும் மத்திய உள்துறை அமைச்சர்

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனுார் கடை வீதியில் வரும் 6ம் தேதி நடக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசார பொதுகூட்டத்திற்கான இடத்தை பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து வரும் 6ம் தேதி தொகுதிக்குட்பட்ட திருக்கனுார் கடை வீதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருக்கனுார் கடை வீதியில் பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கான இடங்கள் தேர்வு மற்றும் ஏற்பாடுகள் தொடர்பாக பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம், பா.ஜ., பொறுப்பாளர்களுடன் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.

அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கவும், அதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

Source link