பவினா நான்காவது தங்கம்

கிரோனா: பாரா டேபிள் டென்னிசில் நடப்பு சீசனில் நான்காவது தங்கம் வென்றார் பவினா படேல்.

ஸ்பெயினில் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா டேபிள் டென்னிஸ் தொடர் நடந்தது. ‘வீல் சேர்’ பிரிவில் இந்தியாவின் பவினா படேல் களமிறங்கினார். காலிறுதியில் பவினா, 3-0 என சீனாவின் மெங்மெங்கை வீழ்த்தினார். அடுத்து நடந்த அரையிறுதியில் பவினா, 3-0 என மற்றொரு சீன வீராங்கனை ஜிருச்சியை வீழ்த்தினார்.

பைனலில் பவினா, பிரான்சின் புளோரா வாட்டியரை சந்தித்தார். முதல் செட்டை பவினா 7-11 என இழந்தார். பின் சுதாரித்த இவர் அடுத்த மூன்று செட்டையும் 11-8, 11-9, 11-7 என வசப்படுத்தினார். முடிவில் பவினா 3-1 என வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றினார்.

நடப்பு சீசனில் 2 ‘சாலஞ்சர்’, 2 ‘பியூச்சர்’ என களமிறங்கிய நான்கு தொடரிலும் தங்கம் வென்று அசத்தினார் பவினா.

பெண்களுக்கான மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் பேபி சபானா, 2-3 என (9-11, 8-11, 12-10, 11-9, 6-11) டென்மார்க்கில் அமெலியிடம் போராடி தோற்றார்.

Source link