‘அனல் பறக்கும்’ கேரள மாநிலம்: வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் சிக்கல்

திருவனந்தபுரம்: கேரள தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரத்துக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. ஆனால், மாநிலம் முழுவதும் தற்போது கோடை வெப்பம் அதிகரித்துள்ளது. வயநாடு, இடுக்கி மாவட்டங்களை தவிர்த்து, மற்ற 12 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுத்துள்ளது. கொல்லம், கோட்டயம், பாலக்காடு ஆகிய மாவட்டங்கள் வெப்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பத்தனம்திட்டா, ஆலப்புழை, திருச்சூர், எர்ணாகுளம், கோழிக்கோடு போன்ற மாவட்டங்களில் தற்போது வெப்பநிலை கடுமையாக உயர்ந்து, 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது. வடகோடியில் உள்ள காசர்கோடு, தென்கோடியில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டங்களில் கூட வெப்பநிலை 36 டிகிரியை எட்டியுள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் அனல் பறப்பதால், பகல் நேரங்களில் வெளியில் செல்வோர் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Source link