TN Assembly Election 2026 Live Updates: 2026 சட்டமன்றத் தேர்தல்

தி.மு.க தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு: திமுக தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியாகிறது. கடந்த முறையை போன்று இம்முறையும் மகளிர் நலன் சார்ந்த அறிவிப்புகள் அதிகளவில் இடம்பெறக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று த.வெ.க வேட்பாளர்கள் அறிமுகம்: 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று காலை 11 மணிக்கு த.வெ.க தலைவர் விஜய் அறிமுகம் செய்கிறார்.
 

  • Mar 29, 2026 07:36 IST

    ஆன்லைனில் நேர்காணல் நடத்திய வி.சி.க தலைவர் திருமாவளவன்

    2026 சட்டமன்ற தேர்தலில் வி.சி.க சார்பில் 8 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு வழங்கியவர்களிடம் திருமா நேர்காணல் நடத்தினார். இணையம் வழியே நள்ளிரவு 11 மணிக்குத் தொடங்கி அதிகாலை 2.30 மணி வரையில் நேர்காணல் நடைபெற்றது.

  • Mar 29, 2026 07:33 IST

    அ.தி.மு.கவின் 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு

    அ.தி.மு.கவின் 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது. சென்னை உள்ளிட்ட விடுபட்ட தொகுதிகளுக்காக வேட்பாளர்கள் இதில் இடம் பெற உள்ளனர். இதுவரை 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக அறிவித்து உள்ளது.

  • Mar 29, 2026 07:33 IST

    ஆண்டிப்பட்டியில் 3ஆவது முறையாக மோதும் சகோதரர்கள்

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக அண்ணன், தம்பி மோதுகின்றன. தி.மு.க சார்பில் ஆ.மகாராஜனும், அ.தி.மு.க சார்பில் ஆ. லோகிராஜனும் போட்டியிடுவதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. 2019 இடைத்தேர்தல் மற்றும் 2021 தேர்தல்களில் தி.மு.க சார்பில் மகாராஜன் வெற்றி பெற்றார்.

  • Mar 29, 2026 07:26 IST

    இன்று த.வெ.க வேட்பாளர்கள் அறிமுகம்

    234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று காலை 11 மணிக்கு த.வெ.க தலைவர் விஜய் அறிமுகம் செய்கிறார்.

  • Mar 29, 2026 07:26 IST

    தி.மு.க தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு

    திமுக தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியாகிறது. கடந்த முறையை போன்று இம்முறையும் மகளிர் நலன் சார்ந்த அறிவிப்புகள் அதிகளவில் இடம்பெறக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Source link