இதன்மூலம் அந்க கிராமத்துக்கு வருகை தந்த முதல் மாவட்ட ஆட்சியர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார். அவருக்கு பழங்குடியின மக்கள் தங்கள் பாரம்பரிய கலாச்சாரத்தைப் பின்பற்றி மஹுவா மலர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். கோண்டி மொழியில் பாடல்கள் பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து அப்பகுதியில் புதிய பள்ளிக் கட்டிடத்தை ஆட்சியர் திறந்து வைத்தார். குழந்தைகளுடன் அமர்ந்து அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால லட்சியங்கள் குறித்து கேட்டறிந்தார். குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள், புத்தகங்களை வழங்கினார். இதையடுத்து சாலை வசதி, செல்போன் தொடர்பு, ரேஷன் விநியோகம் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆட்சியரிடம் கிராம மக்கள் முன்வைத்தனர்.
