சென்னை: அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்தார். இதன் மூலம் சென்னையில்

சென்னை: அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்தார். இதன் மூலம் சென்னையில் களம் காணும் வேட்பாளர்கள் விபரம் வெளியானது.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நிறைவு பெற்று விட்டது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து, அதிமுக 167 இடங்களில் போட்டியிடுகிறது. இந்நிலையில் இன்று (மார்ச் 29) அதிமுக மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இபிஎஸ் வெளியிட்டார்.

* ஆயிரம் விளக்கு- வளர்மதி

* அண்ணாநகர்- கோகுல இந்திரா

* சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- ஆதிராஜாராம்

* திட்டக்குடி- முருகுமாறன்

* துறைமுகம்- ராயபுரம் மனோ

* விருகம்பாக்கம்- விருகை ரவி

* தியாகராய நகர்- சத்யநாராயணன்

* வேளச்சேரி- அசோக்

* சோழிங்கநல்லூர்- கந்தன்

* டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்- ராஜேஷ்

* வில்லிவாக்கம்- விஜயகுமார்

* திருச்சுழி- ராஜவர்மன்

* ஆலந்தூர்- சரவணன்

* கொளத்தூர்- சந்தான கிருஷ்ணன்

* திருவிக நகர்- பொற்கொடி (மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி)

* எழும்பூர்- அபிஷேக் ரங்கசாமி

* ஆலங்குடி- விமல்

ஏற்கனவே முதற்கட்டமாக 23 நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலையும், இரண்டாம் கட்டமாக 127 பேர் பட்டியலையும் இபிஎஸ் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link