தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இத்தகைய சூழலில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. மற்றும் அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் 167 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் நிலையில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் மீதம் உள்ள 17 வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக தற்போது வெளியிட்டுள்ளது.
1.அண்ணா நகர்-கோகுல இந்திரா
2.சோழிங்கநல்லூர்-கே.பி.கந்தன்
3.கே.நகர்-ராஜேஷ்
4.வில்லிவாக்கம்-எஸ்.ஆர்.விஜயகுமார்
5.திருச்சுழி-ராஜவர்மன்
6.ஆலந்தூர்-சரவணன்
7.எழும்பூர்-அபிஷேக் ரங்கசாமி
8.ஆலங்குடி தன.விமல்,
9.கொளத்தூர்-சந்தானகிருஷ்ணன்
10.சேப்பாக்கம்-ஆதிராஜாராம்
11.திட்டக்குடி-முறுகுமாறன்
12.துறைமுகம்-ஆர்.மனோ
13.விருகம்பாக்கம்-விஎன்.ரவி
14.ஆயிரம் விளக்கு-வளர்மதி
15.தியாகராய நகர்-சத்யநாராயணன்
16.வேளச்சேரி எம்.கே.அசோக்
அதேபோல தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் திருவிக நகரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இருக்கிறார்.
