மதுரை: சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான, ‘ஜி ஸ்கொயர்’, மதுரையில் டி.வி.எஸ்., குழும நிறுவனர் டி.வி.சுந்தரம் அய்யங்காருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை 167 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
டி.வி.எஸ்., குழுமத்தின் முதல் சொத்து அது என்று நம்பப்படுகிறது. அங்கு 1.63 ஏக்கர் பரப்பில், ‘ஜி ஸ்கொயர் டெம்பிள் வியூ ஸ்கொயர்’என்ற பெயரில், குடியிருப்பு மனைத் திட்டம் உருவாக்கப்படும்.
மேலும் 2 ஏக்கர் பரப்பு, வர்த்தக பயன்பாட்டுக்கு விடப்படும். மீதமுள்ள நிலம், அடிப்படை கட்டுமானம் மற்றும் இதர வசதிகளுக்காக ஒதுக்கப்படும் என்று, ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
பெரியார் பேருந்து நிலையம் அருகில் அமையும் இத்திட்டத்தில், மொத்தம் 55 மனைகளில் 50 குடியிருப்பு மனைகள், 5 வணிக மனைகள் ஆகியவை இடம்பெறும்.
வீட்டுமனையின் விலை சதுரஅடிக்கு 15,990 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிக மனையின் விலை சதுர அடிக்கு 25,990 ரூபாய்.
