திருச்சி: திருச்சி சமயபுரம் கோவிலில் சீலிங் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை

திருச்சி: திருச்சி சமயபுரம் கோவிலில் சீலிங் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி வீதி மண்டபத்தில் பக்தர்கள் உறங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென சீலிங் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பக்தர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவர் தஞ்சாவூரை சேர்ந்த நதியா, 32, என்பது தெரியவந்தது. மேலும் பெண் பக்தர்கள் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link