பெங்களூருவில் பிரபல தனியார் பல்கலைக்கழகமான PES பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, பேராசிரியராக பணியாற்றி வரும் முரளிதர் தேஷ்பாண்டே வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு முஸ்லீம் மாணவனை நோக்கி, “வகுப்பு நடந்துகொண்டிருக்கும் நீ தொந்தரவு செய்கிறாய். இன்று இங்கே அமைதியாக இருக்கும் என்று நினைத்தேன். உனக்கு வெட்கமாக இல்லையா.. உருப்படாதவனே (Useless fellow), பயங்கரவாதி, உன்னை நான் பயங்கரவாதி என்றுதான் அழைப்பேன்!” என்று தேஷ்பாண்டே கூறியுள்ளார்.
