நமது சிறப்பு நிருபர்ஆண்டிபட்டி தொகுதியில் தி.மு.க., சார்பில் அண்ணனும் அ.தி.மு.க., சார்பில் தம்பியும் 3ம் முறையாக

நமது சிறப்பு நிருபர்

ஆண்டிபட்டி தொகுதியில் தி.மு.க., சார்பில் அண்ணனும் அ.தி.மு.க., சார்பில் தம்பியும் 3ம் முறையாக வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.

தேனி மாவட்டத்தின் விஐபி தொகுதி ஆண்டிபட்டி. எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் போட்டியிட்டு வென்றதால் நாடு முழுவதும் அறியப்பட்ட தொகுதி. இந்த தொகுதியில் 2019ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் மகாராஜன், அ.தி.மு.க., சார்பில் அவரது தம்பி லோகிராஜன் போட்டியிட்டதில் மகாராஜன் வெற்றி பெற்றார்.

2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் மீண்டும் அண்ணன் தம்பிகளே வேட்பாளராக களம் இறங்கினர். இந்த தேர்தலிலும் மகாராஜன் (தி.மு.க.,) வெற்றி பெற்றார்.

குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் லோகிராஜன் இருமுறை வெற்றி வாய்ப்பை இழந்தாலும், தொகுதி மற்றும் கட்சி மேலிடத்தில் தனக்கான செல்வாக்கை நிலை நிறுத்தி வந்தார். இதனால் ஆண்டிபட்டி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் மூன்றாவது முறையாக போட்டிடும் வாய்ப்பு லோகிராஜனுக்கு கிடைத்துள்ளது.

தொடர்ந்து இரு முறை மகாராஜன் வெற்றி பெற்ற நிலையில், வரும் தேர்தலில் 3வது முறையாக, தி.மு.க., வேட்பாளராக மகாராஜன் போட்டியிடுகிறார்.

Source link