சென்னை: தேர்தலில் இருமுனைப்போட்டி தான். நமக்கும், ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி என தவெக தலைவரும், நடிகருமான விஜய் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேசுகையில் தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த தவெக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் விஜய் பேசியதாவது: இந்த கூட்டத்தை வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் என்று சொன்னார்கள். வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் அல்ல; மக்களுக்கான காப்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம். நமது கட்சிக்காரர்களுக்கு தேர்தலை எதிர்க்கொண்ட அனுபவம் இல்லை என்று சொல்வார்கள்.
நமது வேட்பாளர்கள் எல்லோரும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இருக்கிறார்கள். ஒரு எம்எல்ஏ எப்படி இருக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன். சும்மா அனுபவத்தை வைத்து கொண்டு கொள்ளை அடிப்பவர்களாக எம்எல்ஏ இருக்க கூடாது. கேள்வி கேட்கும் ரிப்போர்டர்களை தாக்குகிறவர்களாக இருக்க கூடாது. திமுகவில் இருந்த எம்எல்ஏ மீது கொள்ளை அடித்த வழக்கு இருக்கிறது.
திருட்டு வழக்கு
போதைப்பொருள் கடத்தல் வழக்கு இருக்கிறது. திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று வந்தவர் எல்லாம் ஒருத்தர் இருக்கிறார். நீங்கள் கூட யாரு அந்த எம்எல்ஏ யார் என்று யோசிக்கலாம். அந்த திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று வந்தவரை இந்த தேர்தலில் யாருக்கு எதிராக திமுகவினர் நிற்க வைத்தார்கள் தெரியுமா. இன்றைக்கு அவர்கள் கூட்டணியில் மூச்சு 300 முறை முட்டுக்கொடுக்கும் தலைவருக்கு எதிராக நிற்க வைத்தார்கள். மரியாதை நிமித்தமாக அந் தலைவர் பெயரை சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்.
தேர்தலில் இருமுனைப்போட்டி தான். நமக்கும், ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி. இவ்வாறு விஜய் பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
