‘தனது நீண்ட கால பணியாளரின் மகனுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்!’ – பின்னணி என்ன? |“Vijay Hands MLA Ticket to Trusted Aide’s Son – Inside the Decision & Political Context”

விஜய் எங்கே சென்றாலும் அவருக்குப் பின்னால் ராஜேந்திரன் இருப்பதைப் பார்க்க முடியும். தனது நெருங்கிய வட்டத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே விஜய் இடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் அதில் ராஜேந்திரன் மிக முக்கியமானவர் என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.

விஜய் பனையூருக்கு வந்தாலும் சரி தனி விமானத்தில் வெளியூர்களுக்குப் பறந்தாலும் சரி ராஜேந்திரன் எப்போதும் உடன் இருப்பார். விஜய் காரின் முன்னிருக்கை எப்போதுமே ராஜேந்திரனுக்குத்தான்.

ராஜேந்திரன் - விஜய்

ராஜேந்திரன் – விஜய்

விஜய்யும் ராஜேந்திரனை ஒரு பணியாளர் போல பார்க்காமல் “அண்ணன்’ என்றுதான் பெர்சனலாக அழைப்பார் என்கின்றனர் இருவரின் பந்தத்தையும் அறிந்தவர்கள். ‘விஜய் கட்சி ஆரம்பத்து பொறுப்புகளைப் போடும்போது ராஜேந்திரனை அழைத்து, ‘அண்ணன் உங்களுக்கு எதாவது செய்யணும். என்ன பொறுப்பு வேணும்ணே…’ எனக் கேட்டிருக்கிறார்.

Source link