விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட்; மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம்: திமுக தேர்தல் வாக்குறுதி

சென்னை: இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட் வழங்கப்படும்; மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 29) வெளியிட்டார்.

திமுக வேட்பாளர் பட்டியலை நேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இன்று தேர்தல் அறிக்கையையும் ஸ்டாலின் வெளியிடப்பட்டார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: ஆறாவது முறையாக திமுகவை ஆட்சியில் அமரவைத்து தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வந்திருக்கிறேன். இந்த உணர்வோடு தமிழக சட்டசபை தேர்தலுக்கான எங்கள் வாக்குறுதியை வெளியிடுகிறேன்.இந்ததேர்தலில் வெற்றி பெற்று 7 வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது திமுக. இந்த நம்பிக்கை கட்சியினருக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் உண்டு. இதுவரைக்கும் எந்த மாநில அரசும் இந்தளவு சாதனைகளை நிகழ்த்தியது இல்லை என்று பெருமையோடு சொல்லும் அளவுக்கு ஏராளமான சாதனை திட்டங்கள் உருவாக்கி கொடுத்துள்ளோம். தமிழக உரிமை திட்டம்விடியல் பயணம்காலை உணவு திட்டம்புதுமைப்பெண் தமிழ் புதல்வன்நான் முதல்வன் இல்லம் தேடி கல்விமக்களை தேடி மருத்துவம்இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48கலைஞர் கனவு இல்லம்தாயுமானவர் திட்டம்கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் திட்டம் என ஒவ்வொரு துறைக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை வளர்த்துள்ளோம். அதனால், நமது வளர்ச்சியை தடுக்க முடியவில்லை. மறைக்கவும் முடியவில்லை. நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை சொல்லும் மாநிலமாக தமிழகம் உள்ளது.2021 சட்டசபை தேர்தலின் போது பத்தாண்டுகளுக்கான இலக்கை நிர்ணயித்து பயணத்தை துவங்கினோம். அதற்கான தொலைநோக்கு திட்டங்களை வகுத்தோம். ஒவ்வொரு தனி மனிதரும் பயனடையும் திட்டங்களை உருவாக்கினோம். கொடுத்த வாக்குறுதிப்படி 1 கோடியே 31 லட்சம் மகளிருக்கு ஆயிரம் ரூபாயாக உரிமைத்தொகையாக கொடுக்க துவங்கினோம். தேர்தலை காரணம் காட்டி அதனை தடுக்க பாஜ முயற்சி செய்தது. அந்த சதியை முன்கூட்டியே உணர்ந்து 3 ஆயிரம் ரூபாயும், கோடைகால சிறப்பு நிதியாக 2 ஆயிரம் என 5 ஆயிரம் ரூபாயை மகளிர் வங்கிக்கணக்கில் செலுத்தினோம்.அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றும் வகையில்,பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றி அரசு ஊழியர் மனங்களை குளிர வைத்தோம்.

தமிழக வளர்ச்சியை கெடுக்கும் கூட்டம் தான் திமுகவை எதிர்க்கிறது. அவர்கள் ஏராளமான பொய் செய்திகளை பரப்பினர். அது தமிழக மக்களிடம் எடுபடவில்லை.இப்போது ஒட்டு மொத்த தமிழக மக்களின் எண்ணம், திராவிட மாடல் கட்டமைத்த வளர்ச்சி பாதையில் தமிழகம் பயணிக்கணும். தமிழகம் தலைசிறந்ததலைநிமர்ந்த மாநிலமாக இருக்க வேண்டும்.கல்வியைவளர்க்க, வளர்ச்சியை உறுதி செய்ய திராவிட மாடல் அரசு தொடர வேண்டும். திராவிட மாடல்2.0 அரசு அமைய வேண்டும் என்பது தான் மக்களின் எண்ணம்.இதுவரை செய்த திட்டங்களை விஞ்சும்வகையில் 2.0 இருக்கும்.

எங்களின் கொள்கைகள் , திட்டங்கள் மட்டும் அல்ல. இதற்காக அமைக்கப்பட்ட குழு மாநிலம் முழுதும் பயணம் செய்து மக்களின் கோரிக்கைகளை கேட்டு தயாரித்துள்ளனர். இந்ததேர்தல் அறிக்கையை தயாரிக்க கனிமொழி, இளங்கோவன், தியாகராஜன், டிஆர்பிராஜா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சேனாதிபதி, தமிழரசி, சந்தானம், சுரேஷ் ஆகியோருக்கு எனது பாராட்டையும் ந ன்றியை தெரிவி்த்து கொள்கிறேன்.உங்களின் நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம்.

தேர்தல் வாக்குறுதிகள்இந்த உறுதியோடு வாக்குறுதிகளில் எல்லாம் முக்கியமானதுதான்

1. 1 முதல் 5 ம்வகுப்புவரை படிக்கும் 19 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டது. கூடுதலாக 15 லட்சம் பயன்பெறும் வகையில், முதல்வரின் காலை உணவு திட்டம் 8 வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.2. ஒரு கோடியே 31 லட்சம் பெண்கள் பெற்று வரும் உரிமைத்தொகை 2 ஆயிரமாக உயர்த்தப்படும்.3. இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எந்த வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்பு செட்கள் வழங்கப்படும்.

4. 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுதிமுகவின் தேர்தல் அறிக்கயை தயாரிக்க கனிமொழி தலைமையில் இளங்கோவன், கோவி செழியன், தியாகராஜன், டிஆர்பி ராஜா, அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சேனாதிபதி, தமிழரசி ரவிக்குமார், சந்தானம், சுரேஜ் சம்பந்தம் ஆகியோர் அடங்கிய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருந்தது.

Source link