தி.மு.க.,வின் 2026 சட்டசபை தேர்தல் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
பின் அவர் பேசியதாவது:தமிழகத்தைச் சாதனைகளால் முதன்மை இடத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். எங்களின் தேர்தல் வாக்குறுதிகளை இப்போது வெளியிடுகிறேன். வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று, தி.மு.க. முறையாக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நம்பிக்கை தமிழக மக்களிடமும் உள்ளது. இதுவரை எந்த மாநில அரசும் நிகழ்த்தாத சாதனைகளைச் செய்துள்ளோம் என்று பெருமையுடன் சொல்லும் வகையில், ஏராளமான திட்டங்கள் எங்கள் ஆட்சியில் உள்ளன.மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, தாயுமானவர் திட்டம் என ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளோம். இதனால்தான் தமிழகத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்கவோ, மறைக்கவோ முடியவில்லை. நாடு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்ட 10 ஆண்டுகால இலக்கை நிர்ணயித்துத் தனிமனிதன் பயன்பெறும் வகையில் செயல்படுகிறோம். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து காட்டியுள்ளோம். மக்களின் கருத்துக்களைக் கேட்டுத் தயாரிக்கப்பட்ட இந்தத் தேர்தல் அறிக்கை, இந்தத் தேர்தலின் ‘சூப்பர் ஸ்டார்’. 200 தொகுதிகளில் எங்களின் வெற்றி உறுதி.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் :முக்கிய அறிவிப்புகள்
காலை உணவுத் திட்டம்இதுவரை 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை வழங்கப்பட்ட காலை உணவுத் திட்டம், 2.0 ஆட்சியில் மேல்நிலை வகுப்புகள் வரை விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் கூடுதலாக 15 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர்.
மகளிர் உரிமைத் தொகைதற்போது வழங்கப்படும் ரூ.1000 உரிமைத் தொகை, ரூ.2000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் 20 லட்சம் விவசாயிகளுக்கு எந்தவித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்புசெட்டுகள் வழங்கப்படும்.
வீட்டு வசதிஅடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.மருத்துவக் காப்பீடு ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சமாகவும், காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாகவும் உயர்த்தப்படும்.
கல்வி உதவித் தொகை புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.1000 உதவித் தொகை, ரூ.1500-ஆக உயர்த்தப்படும்.
கொள்முதல் விலை உயர்வு நெல் குவிண்டாலுக்கு ரூ.3500-ஆகவும், கரும்பு டன்னுக்கு ரூ.4500-ஆகவும் கொள்முதல் விலை உயர்த்தப்படும். பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படும்.
உதவித் தொகை உயர்வு முதியோர் உதவித் தொகை ரூ.1200-லிருந்து ரூ.2000-ஆகவும், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை ரூ.1500-லிருந்து ரூ.2000-ஆகவும் உயர்த்தப்படும்.
வேலைவாய்ப்பு மாவட்டந்தோறும் நியோ டைடல் மற்றும் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு 2 லட்சம் பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மொத்தமாக 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.
இல்லத்தரசிகளுக்கான சிறப்புத் திட்டம் வருமான வரி செலுத்தாத இல்லத்தரசிகள் பிரிட்ஜ், மிக்ஸி, வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.8000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும்.
மாணவர்களுக்கான லேப்டாப்உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 5 ஆண்டுகளுக்குள் லேப்டாப் வழங்கப்படும். படிப்பை முடித்த 5 லட்சம் மாணவர்களுக்கு ரூ.1500 உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும்.
அரசுப் பணியாளர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 1.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். 8-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த குழு அமைக்கப்படும்.
கேன்சர் சிகிச்சை மையம்கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், சேலம் உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.
நிருபர்கள் நலன்செய்தியாளர்களின் குழந்தைகளின் கல்வி உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும்.
