ஐ.டி.எப்., டென்னிஸ்: காலிறுதியில் சசிகுமார்

ஆமதாபாத்: ஐ.டி.எப்., டென்னிஸ் காலிறுதிக்கு இந்தியாவின் சசிகுமார், சித்தார்த், மணிஷ் உள்ளிட்டோர் முன்னேறினர்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், மான் கேஷர்வானி மோதினர். இதில் சசிகுமார் 6-7, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு 2வது சுற்று போட்டியில் இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார் 6-4, 6-7, 6-4 என, ரஷ்யாவின் நிகிதா யானினை தோற்கடித்தார். இந்தியாவின் திக்விஜய்பிரதாப் சிங் 6-3, 6-2 என சகவீரர் ஷங்கர் ஹெய்ஸ்னமை வென்றார். இந்தியாவின் சித்தார்த் ரவாத் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சகவீரர் ரோஹன் மெஹ்ராவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். இந்தியாவின் அர்ஜுன் ரதி 6-4, 7-5 என, சகவீரர் ஆதித்யா விஷால் பால்சேகரை வென்றார்.

Source link