சென்னை: திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற மாட்டார் என அமைச்சர் நேரு தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அமைச்சர் நேரு கூறியதாவது:திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிட்டாலும், அங்கு தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெற வைப்போம். இந்த தேர்தலில் இளைஞர்கள், மகளிர் என பலருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என இபிஎஸ் கூறுகிறார்.
ஆனால், அவருடைய ஆசை நிறைவேறப் போவதில்லை. தி.மு.க., அணிதான் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும். கூட்டணியில் யாரையும் விட்டுவிடாமல், அனைவரையும் முதல்வர் அரவணைத்து செல்கிறார்.
விஜய் பிரசாரம் செய்வதை, நாங்கள் ஏன் தடுக்க போகிறோம். அவரவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தி.மு.க.,வை விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருச்சியை இரண்டாவது தலைநகராமக்குவது குறித்து, நிதி நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும். இவ்வாறு கே.என்.நேரு கூறினார்.
