சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் எம்பிக்களாக இருக்கும் திருமாவளவன் மற்றும் சி.வி.சண்முகம் போட்டியிட

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் எம்பிக்களாக இருக்கும் திருமாவளவன் மற்றும் சி.வி.சண்முகம் போட்டியிட உள்ளனர்.

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23 ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், திமுக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது.இந்நிலையில், தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வந்த இரண்டு எம்பிக்கள், தற்போது சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

அதில், ஒருவர் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். இவர், 2001, 2006 சட்டசபை தேர்தலில் திண்டிவனம் தொகுதியிலும்,2011 மற்றும் 2016 தேர்தலில் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா ஆட்சியிலும் இபிஎஸ் ஆட்சியிலும் அமைச்சராக இருந்த அவர், கல்வித்துறை, சட்டத்துறை அமைச்சராக இருந்தார்.விழுப்புரம் தொகுதியில் 2021 தேர்தலில் தோல்வியடைந்தார். பிறகு, 2022 ஜூன் மாதம் ராஜ்யசபா எம்பி ஆனார். இந்த முறை மயிலம் தொகுதியில் மீண்டும் களமிறங்கி உள்ளார்.

திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் 2001 ல் நடந்த சட்டசபை தேர்தலில் மங்களூரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2004 வரை அந்த பதவியில் இருந்தார். பிறகு பதவியை ராஜினாமா செய்தார்.2016 சட்டசபை தேர்தலில் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். லோக்சபா தேர்தலை பொறுத்தவரை அவர், சிதம்பரம் தொகுதியில் 1999 மற்றும் 2004 ம்ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்விடைந்தார்.2009 தேர்தலில் இதே தொகுதியில் வெற்றி பெற்ற இவர், 2014 ல் தோல்வியடைந்தார். 2019 மற்றும் 2024ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். தற்போது எம்பி ஆக இருக்கும் திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு போட்டியிடுகிறார்.

சட்டசபை தேர்தலில் போட்டியிட்டாலும், திருமாவளவனும், சண்முகமும் இன்னும் எம்பி பதவியை ராஜினாமா செய்யவில்லை. தேர்தல் முடிந்த பிறகு அது குறித்து முடிவு செய்வார்கள்.

Source link