இஸ்லாமாபாத்: 'மேற்கு ஆசியாவில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவுடன் நிபந்தனையுடன் கூடிய

இஸ்லாமாபாத்: ‘மேற்கு ஆசியாவில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவுடன் நிபந்தனையுடன் கூடிய பேச்சுக்கு தயார்’ என, பாக்., அரசு மூலம் அமெரிக்காவுக்கு ஈரான் செய்தி அனுப்பியதாக தகவல் வெளியாகிஉள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீது, இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா பிப்., 28ல் போரை துவக்கியது.

போரை நிறுத்துவதற்கான அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்தார்.

இந்த விஷயத்தில், நம் அண்டை நாடான பாகிஸ்தான், மத்தியஸ்தம் செய்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவுடன் போர் நிறுத்த பேச்சுக்கு ஈரான் நிபந்தனையுடன் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக பாக்., துாதரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து, வெளிநாட்டு செய்தி ஊடகங்களுக்கு துாதரக அதிகாரிகள் அளித்த தகவல்:

அமெரிக்காவுடன் பேச்சு நடத்த ஈரான், நிபந்தனை அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது. உடனடியாக தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும், எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என்பதற்கான உத்தரவாதம் தேவை என்பவையே ஈரானின் நிபந்தனை.

இதற் கான ஏற்பாடுகள் பாக்., வழியாக முன்னெடுக்கப்படுகிறது.

இதில், சவுதி அரேபியா, துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளும் பங்கேற்று அமெரிக்காவிடம் ஈரானின் கவலைகளை எடுத்துரைக்கும். இஸ்லாமாபாதில் இந்த நான்கு நாடுகளின் கூட்டம் நேற்று துவங்கியது.

இதில், ஈரான் முன்வைத்த நிபந்தனைகள் குறித்து ஆலோசித்து, பேச்சுக்கான திட்டம் வகுக்கப்பட உள்ளது. அமெரிக்காவிடமிருந்து உறுதியான உத்தரவாதம் கிடைத்தால், ஏப்., 7க்குள் போர் நிறுத்தம் ஏற்படும்.

இவ்வாறு அ தில் கூறப்பட்டுள்ளது.

Source link