கொல்கட்டா: 'மேற்கு வங்கத்தில் பா.ஜ., ஆட்சி அமைந்தால் மக்களால் மீன் கூட சாப்பிட முடியாது; உணவு அரசியலை புகுத்தி

கொல்கட்டா: ‘மேற்கு வங்கத்தில் பா.ஜ., ஆட்சி அமைந்தால் மக்களால் மீன் கூட சாப்பிட முடியாது; உணவு அரசியலை புகுத்தி அதற்கு பா.ஜ., முட்டுக்கட்டை போட்டு விடும்’ என, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

மேற் கு வங்கத்தில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக, வரும் ஏப்., 23 மற்றும் 29ம் தேதிகளில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இங்கு, ஆளும் திரிணமுல் காங்., கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

ஆட்சியை மீண்டும் தக்க வைக்கும் நோக்கில் திரிணமுல் காங்., தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். புருலியா மாவட்டத்தில் நேற்று நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

பா.ஜ.,வுக்கு எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை கிடையாது. கலவரத்தை துாண்டி, அதன் மூலம் குளிர்காய்வது தான் அக்கட்சியினர் வேலை. மீன் சாப்பிடுவது மேற்கு வங்க மக்களின் வாழ்வியலுடன் கலந்தது. இங்கு, பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், மீன் சாப்பிடுவதை தடுத்து நிறுத்துவர். இறைச்சி, முட்டை சாப்பிட கூட எதிர்ப்பு காட்டுவர். மக்கள் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை தீர்மானிக்க இவர்கள் யார்? பா.ஜ.,வின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பொதுமக்கள் இரையாகி விடக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link