புதுடில்லி: இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் 43. மணிப்பூரை சேர்ந்த இவர், 6 முறை (2002, 2005, 2006, 2008, 2010, 2018) உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். லண்டன்
ஒலிம்பிக்கில் (2012) வெண்கலம் கைப்பற்றிய மேரி கோம், ஆசிய விளையாட்டு (2014), காமன்வெல்த் விளையாட்டில் (2018) தங்கத்தை தட்டிச் சென்றார். இந்நிலையில் மேரி கோம், தொழில்முறையிலான போட்டிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து மேரி கோம் கூறுகையில், ”ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றது மகத்தான ஒன்று. வயது வரம்பு காரணமாக போட்டிகளில் விளையாட முடியாதது வருத்தம் அளிக்கிறது. தொழில்முறை குத்துச்சண்டையில் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இதை பரிசீலனை செய்ய உள்ளேன். மணிப்பூரில், குத்துச்சண்டை அகாடமி நடத்தி வருகிறேன். வயதை பொருட்படுத்தாமல், இந்திய குத்துச்சண்டை போட்டியின் வளர்ச்சிக்கு எனது பங்களிப்பை வழங்குவேன்,” என்றார்.
