ஈரானுடன் தரை வழி போருக்கு தயாராகும் அமெரிக்கா

வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான போ ரில், இதுவரை வான்வழி தாக்குதல் மட்டும் நடத்தி வந்த அமெரிக்கா தரைவழி தாக்குதலுக்கான திட்டத்தை தயாரித்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‘வாஷி ங்டன் போஸ்ட்’ பத்திரிகையிடம் ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:

ஈ ரானின் கார்க் தீவு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி அருகிலுள்ள கடற்கரை பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கைகள் இருக்கும். சிறப்பு படைகள் மற்றும் சாதாரண படையினரை பயன்படுத்தி தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளோம் .

கார்க் தீவு உள்ளிட்ட முக்கி ய இடங்களை கைப்பற்றி, கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள ஆயுதங்களை கண்டறிந்து அழிக்கும் நோக்கமும் பரிசீலனையில் உள்ளது.

இந்த திட்டங்கள் அவசரமாக உருவாக்கப்பட்டவை அல்ல. முன்கூட்டியே ஆய்வு செய்யப்பட்டு பல் வேறு நிலைகளில் பரிசோதிக்கப்பட்டவை. ஈரானுக்கு எதிரான தரைவழி தாக்குதல் சில வாரங்களிலிருந்து சில மாதங்கள் வரை நீடிக்கக்கூடும். இந்த திட்டங்களுக்கு அதிபர் டிரம்ப் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அமெரிக்க

வீரர்களை

குறிவைத்த ஈரான்

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் அமெரிக்க ராணுவத்தினர் 500க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்ததாக கூறப்படும் இரு இடங்களில் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. இருப்பினும், தாக்குதல் தொடர்பான தகவலை அமெரிக்கா இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

Source link