சென்னை: ‘தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், சில இடங்களில், இன்றும், நாளையும், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
வடக்கு ஒடிசா முதல், தமிழகத்தின் தென்மாவட்டங்கள் வரை, தெலுங்கானா மற்றும் கர்நாடகா வழியாக, 900 மீட்டர் உயரத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், இன்றும், நாளையும், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்ட கடலோர பகுதிகளிலும், இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 35 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
