குருத்தோலை ஞாயிறு நாளில் த.வெ.க., வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: குருத்தோலை ஞாயிறன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட த.வெ.க., தலைவர் விஜய், தான் போட்டியிடும் தொகுதிகளையும், மத அடிப்படையிலேயே தேர்வு செய்திருக்கிறார்.

த.வெ.க., தலைவர் விஜய், கிறிஸ்துவர். அவரின் முழுப்பெயர் ஜோசப் விஜய். சில ஆண்டுகளுக்கு முன் வரை தன் பெயரை விஜய் என்றே குறிப்பிட்டு வந்தார். அப்போது, அவரது முழுப்பெயரை குறிப்பிட்டு பா.ஜ., மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் விமர்சித்து வந்தன.

தற்போது, முக்கிய நிகழ்வுகளில் தன் பெயரை, ஜோசப் விஜய் என அடையாளப்படுத்தி வருகிறார். சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் த.வெ.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை, கிறிஸ்துவர்களின் புனித நாளான குருத்தோலை ஞாயிறு தினமான நேற்று விஜய் அறிவித்து உள்ளார்.

மேலும், கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதாக விஜய் அறிவித்துள்ளார். வேட்பாளர் அறிவிப்பின் போதும், தன் பெயரை, ‘சி.ஜோசப் விஜய்’ என, இரண்டு முறை அழுத்தமாக விஜய் கூறினார்.

Source link