புதுச்சேரி: இந்தியாவையே அலற வைத்த போலி மருந்து விவகாரம், பல ஆண்டுகளாக நிறைவேறாத மாநில அந்தஸ்து, நிதி கமிஷனில் புதுச்சேரியை இதுவரை சேர்க்காதது, பொதுப் பணித் துறை உயரதிகாரியே லஞ்ச வழக்கில் சிக்கியது என பல்வேறு பிரச்சினைகள் தேசிய ஜனநாயக கூட்டணியை வரிசைக்கட்டி வலம் வந்தன.
வழக்கமாக வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் செய்யும் ரங்கசாமி, இம்முறை முந்திக் கொண்டார். எதிர்தரப்பில், காங்கிரஸ் – திமுக இடையே ஈகோவால் இண்டியா கூட்டணியே சிதைந்துவிட்டது.
