'லக் ஷயா ஏ.எம்.சி.,' நிறுவனத்துக்கு செபி அனுமதி!

‘மி யூச்சுவல் பண்டு’ நிறுவனத்தை துவங்க, ‘லக் ஷயா ஏ.எம்.சி.,’ நிறுவனத்துக்கு ‘செபி’ அனுமதி வழங்கியுள்ளது. மும்பையை தாண்டி, நிதி நிறுவனங்கள் மற்ற நகரங்களுக்கு பரவி வரும் நிலையில், இந்நிறுவனம் தனது தலைமையகத்தை அகமதாபாத்தில் அமைத்துள்ளது.

இந்தியாவில் ‘எக்ஸ்சேஞ்ச் டிரேடடு பண்டுகளை’ அறிமுகப்படுத்திய ‘பெஞ்ச்மார்க் ஏ.எம்.சி.,’ நிறுவனத்தின் நிறுவனர்களான சஞ்சீவ் ஷா, ராஜன் மேத்தா மற்றும் சஞ்சய் கைடோண்டே ஆகியோர் இந்நிறுவனத்தை வழிநடத்த உள்ளனர்.

தனது புதிய திட்டங்கள் மற்றும் அவை எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை ‘லக் ஷயா ஏ.எம்.சி.,’ நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link