‘சர்ப்ரைஸ் கொடுத்த தொண்டர்’-எடப்பாடி செய்த செயல்

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பரப்புரையில் இறங்கியுள்ளன. அதேபோல் தேர்தல் பறக்கும் படையும் பல்வேறு இடங்களில் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர். இந்தநிலையில் கன்னியாகுமரியில் வேட்பாளர் தளவாய் சுந்தரத்தை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது திடீரென அங்கிருந்த அதிமுகவின் தொண்டர் ஒருவர் எடப்பாடி பழனிசாமி அஜித் உடன் எடுத்துக்கொண்ட புகைப்பட  பிரேமை எடப்பாடி இடம் கொடுத்தார். அதனை வாங்கி மக்களை நோக்கிக் காட்டிய எடப்பாடி பழனிசாமி பின்னர் அங்கிருந்த மக்களவை நோக்கிக் கையசைத்து விட்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Source link