திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, அரசால் நியமிக்கப்படும் பெட்ரோல் நிலையங்கள் மூலம் மண்ணெண்ணெய் விநியோகிக்க அனுமதிக்கப்படும். இதன்படி ஒவ்வொரு பெட்ரோல் விற்பனை நிலையமும் 5,000 லிட்டர் வரை மண்ணெண்ணெயை இருப்பு வைக்கலாம். இதற்காக, மாநில அரசுகள் மூலம் ஒரு மாவட்டத்திற்கு அதிகபட்சம் இரண்டு பெட்ரோல் பங்குகள் நியமிக்கப்படும்.
தொடர்ந்து நிலவி வரும் உலகளாவிய நெருக்கடியால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில், வீடுகளுக்கு அத்தியாவசிய எரிபொருள் கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே உள்ள எரிபொருள் விநியோக வலையமைப்பின் மூலம் விரைவான விநியோகத்தை எளிதாக்கும் வகையில், தற்போதுள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மண்ணெண்ணெயை இருப்பு வைக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இது 60 நாட்களுக்கு அல்லது மறு அறிவிப்பு வரும் வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
