`தேர்தலில் ஜெயிக்கவில்லை என்றால் சாவதைத் தவிர வேறு வழி இல்லை!’ – அதிர்ச்சி கொடுத்த திமுக எம்.எல்.ஏ

அதனால் வசந்தவேல் உயிருடன் இருக்க வேண்டுமென்றால், 25 நாட்களுக்கு நாம் அயராது பாடுபட வேண்டும். நம் வீட்டுப் பிள்ளையின் வெற்றிக்கு நாம்தான் உழைக்க வேண்டும். நாம் அனைவரும் வசந்தவேல்தான், நாம்தான் உதயசூரியன் என்ற எண்ணத்துடன், வசந்தம் கார்த்திகேயனின் ஆதரவுடன் அவரை நாம் வெற்றிபெற வைக்க வேண்டும்.

நான் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதி கூட எனக்கு முக்கியம் இல்லை. உளுந்தூர்பேட்டை தொகுதி வெற்றிதான் எனக்கு முக்கியம். உங்கள் பார்வையில் வேண்டுமானால் வசந்தவேலிடம் என்ன இருக்கிறது என்று கேட்கலாம்.

அதை வசந்தவேலிடம்தான் கேட்க முடியுமே தவிர, வசந்தம் கார்த்திகேயனிடம் கேட்க முடியாது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் வீடு பார்க்குமாறு கூறியிருக்கிறேன். அவரை சட்டமன்ற உறுப்பினராக்க நீங்கள் அயராது பாடுபட வேண்டும் என்று உங்கள் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன். நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான்.

தி.மு.க எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன்

தி.மு.க எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன்

இதை விட்டுவிட்டால் உளுந்தூர்பேட்டை தொகுதியை காப்பாற்றவே முடியாது. எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், “வசந்தம் கார்த்திகேயனின் விளம்பர மோகத்துக்கு அளவே இல்லையா ? அவரும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.

அப்படி இருக்கும்போது, அவர் தொகுதியை விட்டுவிட்டு வேறு ஒரு தொகுதியில் வேலை செய்வாரா ? மேலும் உளுந்தூர்பேட்டை தொகுதி கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டத்தில் வருகிறது.

அதன் மாவட்டச் செயலாளர் எங்கள் எம்.எல்.ஏ உதயசூரியன்தான். அவர் இருக்கும்போது இவர் முந்திரிக் கொட்டைத்தனமாக நடந்து கொண்டதுடன், எதிர்க்கட்சிகள் கேலி செய்யுமளவுக்கும் பேசி வைத்திருக்கிறார்” என்று கடுகடுக்கின்றனர் வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியனின் ஆதரவாளர்கள்.

Source link