Peddi: "அப்போது சைவ உணவு மட்டுமே" – ராம் சரணின் மல்யுத்த வீரருக்கான உடலமைப்பிற்கு பின்னிருக்கும் கதை

ராம் சரண் நடித்திருக்கும் ‘பெத்தி’ திரைப்படம் அடுத்த மாதம் 30-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், இந்த ரிலீஸ் தேதியிலிருந்து படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகலாம் எனப் பேசப்படுகிறது.

அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடவில்லை. இயக்குநர் புச்சி பாபு சானா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

Peddi Movie

இப்படத்தில் ராம் சரணுடைய மல்யுத்த வீரருக்கான உடலமைப்பு போஸ்டரும் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் அந்த உடலமைப்பைக் கொண்டு வருவதற்கு ராம் சரண் எத்தகைய கடினங்களைச் சந்தித்தார் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் புச்சி பாபு சானா.

அவர், “படத்தில் உண்மையான மல்யுத்த வீரரின் உடலமைப்பைப் கொண்டு வருவதற்காக எட்டு மாதங்கள் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டார் ராம் சரண்.

உடல் தசைகளை மெருகேற்றி, கதாபாத்திரத்தின் உடல் மொழி, நடை என அனைத்தையும் முழுமையாக உள்வாங்க வேண்டியிருந்தது.

திரையில் இந்த உடல் மாற்றம் இயல்பாகத் தெரிய வேண்டும் என்பதற்காக ராம் சரண் கடுமையாக உழைத்தார்.

Director Buchi Babu Sana
Director Buchi Babu Sana

ஆனால் மிகவும் ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால், ஐயப்பனுக்காக அவர் மாலை போட்டிருந்த நேரத்திலும் அவர் தனது உடற்தகுதியைக் கவனித்துக் கொண்டார்.

அப்போது கடுமையான ஆன்மீக ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டியிருந்தாலும், ராம் சரண் ஒரு நாள்கூட பயிற்சியை நிறுத்தவில்லை.

சைவ உணவை மட்டுமே எடுத்துக் கொண்டு தனது உடலைச் சிறப்பாகப் பராமரித்தார். இந்த உறுதியும் ஒழுக்கமும் பலரை வியக்க வைத்தது” எனக் கூறியிருக்கிறார்.

Source link