2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பரப்புரையில் இறங்கியுள்ளன. அதேபோல் தேர்தல் பறக்கும் படையும் பல்வேறு இடங்களில் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர். 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். பிரச்சாரத்தில் விஜய் பேசுகையில், ”ஒரு நல்ல காரியத்தை தொடங்குவதற்கு முன்னாடி நமக்கு பிடித்தவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து ஸ்டார்ட் பண்ணலாமாம். தமிழ்நாட்டில் எங்கிருந்து வேணாலும் நாம் ஸ்டார்ட் பண்ணலாம். இருந்தாலும் நம்ம வீட்டு வாசலில் இருந்து தொடங்குவது என்று இருக்கிறது அல்லவா. நம்மைப் பெற்ற அம்மா இருக்கும் இடத்தில் இருந்து தொடங்குகிறேன். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் நம்ம பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரத்தை ஸ்டார்ட் பண்ண முடிவு பண்ணிட்டேன். வட சென்னையில் ரொம்ப மிகப்பெரிய அடையாளத்தில் ஒன்றாக இருக்கக்கூடிய சர்ச், பிரசன்ன லட்சுமி நரசிம்மர் கோவில், புகழ்பெற்ற மசூதிகள் இருக்கின்ற இடத்தை பிரச்சாரத்தை ஸ்டார்ட் பண்ணுகிறோம்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத, போதைப்பொருள் அதிகமாக இருக்கிற தமிழ்நாட்டை காப்பாற்றி ஆக வேண்டும். தமிழ்நாட்டை இப்படி ஒரு நிலைமைக்கு கொண்டு வந்தது யார் என்று நான் சொல்லத்தேவையில்லை தீயசக்தி திமுகதான் தான் காரணம். ஒண்ணுத்துக்கும் உதவாத ஆட்சியை நடத்திக் கொண்டு விரைவில் விடைபெறப் போகும் ஸ்டாலின் சார் தான் காரணம். ஐந்து வருடத்தில் ஆட்சி நடத்தினாங்களா வேற ஏதாவது நடத்தினார்களா? சோறு தண்ணி கூட இல்லாமல் இருந்து விடலாம் அடிப்படை வசதிகள் இல்லாமல் எப்படி இருக்கிறது? பெண் பிள்ளைகள் கழிவறைக்குகூட செல்ல முடியவில்லை. போய் வருவதற்குள் என்ன நடந்து விடுமோ என்ற பயம் இருக்கிறது. ஒரு பாட்டி வயதில் இருப்பவர்கள் கூட பாதுகாப்பு இல்லை. ஒரு டீக்கடையில் நிம்மதியா டீ குடிக்க முடியவில்லை. போதையை போட்டு வந்து வெட்டிவிட்டுப் போய் விடுகிறார்கள். இது என்ன நாடா இல்ல காடா? இங்கே அரசு என்று ஒன்று இருக்கிறதா? இல்லையா? ஐந்து வருடம் போலீஸ் டிபார்ட்மென்ட்டை கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் சாரால் ஒரு அடிப்படை பாதுகாப்பு கூட கொடுக்க முடியவில்லை என்றால் எதற்கு இந்த ஆட்சி? எதற்கு இந்த அதிகாரம்? அவர்களுக்கு குடும்பத்தோடு சேர்ந்து கொள்ளை அடிப்பது தான் முக்கியம்” என்றார்.
